நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் அமித்ஷாவுக்குப் பதில் அதே உருவ ஒற்றுமை கொண்ட இயக்குநர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது.

இந்த புகைபடத்தை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவினரை கலாய்க்கும் விதமாக ‘சந்தான பாரதி ஃபேன் கிளப்’ என குறிப்பிட்டுள்ளார்.