தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற உதவி செய்பவருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசால் ஏற்கனவே வெகுமதியாக வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உடன் மத்திய அரசு சார்பாக 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்று இருந்தால் அவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஒருவரின் உயிரை பலர் காப்பாற்ற இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும். பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுபவருக்கு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் தொகையுடன் மாநில சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.