தமிழகத்தில் குடும்பத் தடவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மாநில முழுவதும் சுமார் ஒரு கோடி மகளிர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் பேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜூலை 20ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ள நிலையில் டோக்கன் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ள இருப்பதால் அதற்கான ஊக்கத்தொகையாக ஒரு கார்டுக்கு 35 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.