
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை தயார் செய்து அதனை கடல் மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும் எனவும் ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.