ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ஆபாச நிகழ்ச்சி தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது சமூக ஊடகங்களில் தீவிர கண்டனங்களைத் தூண்டியுள்ளது.
சித்தூர் மாவட்டம், பலமனேர் மண்டலத்தில் உள்ள வட்டுரு கிராமம் அருகே விநாயகர் மண்டபங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், திரைப்படப் பாடல்களுக்கு பெண்கள் அரைநிர்வாணமாக ஆடிய காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி போன்ற புனித நாளில், பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபட்டு, மத ஒழுக்கம் கடைப்பிடித்து வரும் வேளையில், இவ்வகையான நிகழ்ச்சி மத உணர்வுகளை புண்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விழாக்களில் மத புனிதம் காக்கப்பட வேண்டிய நேரத்தில், இத்தகைய ஆபாச நடனம் பக்தர்களிடையே அதிர்ச்சி மற்றும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
చిత్తూరులో వినాయక చవితి ఉత్సవాల్లో రికార్డింగ్ డాన్సులు
పలమనేరు – టి.వడ్డూరు గ్రామంలో వినాయక మండపం ముందు అశ్లీల నృత్యాలు
అనుమతి లేకుండా రికార్డింగ్ డాన్సులు నిర్వహించిన ఆర్గనైజర్, మరికొందరిపై కేసు నమోదు pic.twitter.com/P1acLk2mbL
— Telugu Scribe (@TeluguScribe) August 31, 2025
சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதும், பல இந்து அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், விழாவை ஏற்பாடு செய்த இளைஞர்கள் மற்றும் நடனக் குழுவைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், விழா ஏற்பாட்டாளர்களிடம் இருந்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மத நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
