கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை நிற ஆடை மற்றும் ஹிஜாப் அணிந்திருந்த ஒரு பெண், கோயில் வளாகத்திற்குள் காலணி அணிந்து வந்ததற்காக அந்தச் சுற்றுலாப் பயணி அவர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

காலணி அணிந்திருந்த அந்தப் பெண்ணின் பெயர் ரோஷினி முஸ்தாபி என்றும், தான் அங்கு பணிபுரியும் ஊழியர் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் அந்தச் சுற்றுலாப் பயணி குற்றம்சாட்டியுள்ளார். இந்த வைரல் வீடியோ குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

<a href=”http://

“>

“இது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனிதமான இந்து வழிபாட்டுத் தலம்; இங்கு வரும் பக்தர்களைப் போல ஏஎஸ்ஐ ஊழியர்களும் காலணிகளைக் கழற்றிவிட்டு மதிப்பளிக்க வேண்டும், சுற்றுலாப் பயணியின் தைரியமான கேள்வி பாராட்டுக்குரியது” என ஒரு தரப்பினர் ஆதரித்துப் பேசி வருகின்றனர். மற்றொரு தரப்போ, “வெயிலின் தாக்கத்தில் இருந்து அவரது பாதங்களைக் காக்க நீங்கள் வரப்போகிறீர்களா?” என அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ளனர்.

அதே நேரத்தில், மற்றொரு பயனர் 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கு சென்றபோது நிலவிய மோசமான சுகாதாரக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, “பாதாமி மற்றும் பூத்நாத் கோயில் வளாகங்களில் சிறுநீர் நாற்றம் கடுமையாக வீசியது; அங்கு நிர்வாகம் மிக மோசமாக உள்ளது” எனத் தனது குமுறலையும் பதிவிட்டுள்ளார்.