ஈரோடு மாவட்டம் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விதிமுறைகளை மீறும் ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆலை நிர்வாகத்தினர் சுத்திகரிக்கும் நிலையத்தை மூடியதால் அதை சார்ந்த ஜவுளி ஆலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆலை தரப்புக்கு ஆதரவாக அதிமுக ஜெயக்குமார் பேசியதாக கூறப்படும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.