உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள ஒரு மதரசாவில், இரண்டு மௌலானாக்கள் சேர்ந்து 10 வயது சிறுவன் ஒருவனை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு மௌலானா சிறுவனைத் தலைகீழாகக் கவிழ்த்து அவனது கால்களைப் பிடித்துக் கொள்ள, மற்றொரு மௌலானா சிறுவனைப் பிரம்பால் சரமாரியாகத் தாக்குவது பதிவாகியுள்ளது.

அந்தச் சிறுவன் தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுதபோதும், எவ்வித இரக்கமும் இன்றி சுமார் 36 முறை பிரம்பால் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மௌலானாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வி கற்க வேண்டிய இடத்தில் குழந்தைகளை இப்படி மிருகத்தனமாகத் தாக்குவது கண்டனத்திற்குரியது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.