தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவெக தீவிரமாகப் போராடி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 116 இடங்கள் கைவசம் உள்ள நிலையில், இன்னும் 2 இடங்களுக்காக விசிக-விடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த இக்கட்டான அரசியல் சூழலில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. “விஜய் அண்ணா, நீங்கள் முதல்வராக வர வேண்டும் என நாங்களெல்லாம் தவம் கிடக்கிறோம்; ‘ஜெயிச்சிடு மாறா’ பட வசனம் போல எப்படியாவது ஜெயித்துவிடுங்கள்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

மேலும், ஆட்சியமைக்கத் திராவிடக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால் ஈகோ பார்க்காமல் தயங்காமல் கேளுங்கள் என்றும், தமிழகத்தில் நமக்கு யாரும் எதிரி இல்லை என்றும் அவர் அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த எமோஷனல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.