கேரளாவின் கொச்சி நகரைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின், தனது மரணத்திற்குப் பிறகும் பிறர் வாழ்வில் ஒளியேற்றி, அம்மாநிலத்தின் மிகச்சிறிய வயதுடைய உறுப்பு தானம் செய்பவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதனால் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட தனது பிஞ்சு குழந்தையின் நிலையை அறிந்த பெற்றோர், மிகுந்த மனத்துணிச்சலுடன் மற்றவர்களுக்கு வாழ்வளிக்க முன்வந்து குழந்தையின் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்தத் துணிச்சலான முடிவு, மரணத்தின் பிடியில் இருந்த சிலருக்குப் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளது, குறிப்பாக ஆலினின் இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் தேவையுள்ள நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளன.
மேலும் துயரமான சூழலிலும் ஆலினின் பெற்றோர் எடுத்த இந்த உன்னதமான முடிவு, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் பெரும் அளவில் ஏற்படுத்தியுள்ளது. மழலைப் பருவத்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், ஆலின் மற்றவர்களின் உடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் “ஈகை” என்னும் பண்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும் இந்தப் பிஞ்சு குழந்தையின் தியாகம், கேரள மாநிலம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணம் ஒரு முடிவல்ல, அது மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் தொடக்கமாகவும் இருக்க முடியும் என்பதை ஆலின் மற்றும் அவரது பெற்றோர் உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
