தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் சென்ற ஒரு எம்பிஏ மாணவி, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி காணாமல் போன சில நாட்களில், அவரது ஆபாச வீடியோ ஒன்று கல்லூரி மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது காதலனின் அறையில் மாணவி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபரீத சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள காதலனைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆபாச வீடியோவை வெளியிட்டது யார்? மற்றும் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.