காதல் விவகாரங்களில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ராஜஸ்தானில் ஒரு இளம் ஜோடி ஆற்றின் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தனது காதலன் தான் கேட்ட ஒரு விஷயத்தைச் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் திடீரென ஓடிச் சென்று ஆற்றில் குதித்தார். எதிர்பாராத இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த காதலன், பதற்றத்துடன் செய்வதறியாது திகைத்து நின்ற காட்சி அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
उत्तर प्रदेश के मऊ में वैलेंटाइन वीकेंड पर प्रेमिका प्रेमी से नाराज होकर सरयू नदी में कूद गई।
नदी का पानी बेहद ठंडा था, इसलिए युवती सुसाइड की हिम्मत नहीं जुटा पाई और तैरकर बाहर निकलने की कोशिश करने लगी।
नदी में नाविकों ने युवती को तैरने की कोशिश करते देखा नाविक बोट ले पहुंचे… pic.twitter.com/O1ddbr3PmQ
— Shahnawaz (News 24) (@Shahnawazreport) February 11, 2026
“>
இதனால் அந்தப் பெண் ஆற்றில் குதித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு ஆற்றில் குதித்து அவரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் “சிறுபிள்ளைத்தனமான கோபத்திற்காக உயிரைப் பணையம் வைப்பது சரியல்ல” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுக்களைத் தரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
