சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதியில் தனியார் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு வாலிபர் அத்துமீறி மகளிர் விடுதிக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். அந்த பெண் கண்விழித்து சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் அத்துமீறி விடுதிக்குள் நுழைந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது லட்சுமணன் இதே போல பல்வேறு மகளிர் விடுதிகளில் அத்துமீறி நுழைந்தது உறுதியானது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.