தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் அதிரடியாகவும் நக்கலாகவும் பதிலளித்துள்ளார். “சந்திக்கவே முடியாமல், எல்லைக்கு அப்பால் ‘நாட் ரீச்சபிள்’ (Not reachable) நிலையில் இருப்பவர்களைப் பற்றி கேள்வி கேட்டு எங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து திமுக தரப்பு பெரிய அளவில் அலட்டிக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக அவரது இந்தப் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் களத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி விவாதிக்கத் தேவையில்லை என்ற தொனியில் அவர் பேசியிருப்பது, தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.