இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஜியோ டிவி பிரீமியத்தின் 1198 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் சுமார் 12 ஓடிடிகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

பிரைம் வீடியோ மொபைல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லைன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், டாக்குபே, எபிக்ஆன், சன்நெக்ஸ்ட், Hoichoi, Chaupal, Planet Marathi மற்றும் Kachha Lannka ஆகியவை இதில் உள்ளது. மேலும் Jio TV, Jio Cloud வசதிகளும் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் உங்களுக்கு 84 நாட்களுக்குள் 168 ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தில் ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் டேட்டா பலன்கள் கிடைக்கும்.