தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா (துறை) திடீரென மாற்றப்பட்டது குறித்து, அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியோடு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த இலாகா மாற்றம் குறித்து அவர் பேசுகையில், “வருவாய்த்துறை மூலமாக மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. எனது உள்ளத்தில் இருந்த இந்த விருப்பத்தை முதல்வர் விஜய்யிடம் ஓப்பனாகக் கேட்டுக் கொண்டேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய், உடனடியாகத் துறையை மாற்றித் தந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகாரப் பந்தாக்கள் எதுவும் இல்லாமல் எப்போதும் மக்களோடு மக்களாகச் சாதாரண எளிய மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது உண்மையான விருப்பம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அந்தப் பேட்டியில் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.