தமிழக வெற்றி கழகம்  கட்சியின் (தவெக) தலைவர் விஜய், கட்சியின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கு கூடுதல் பொறுப்பாக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணியின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய துணைப் பொதுச் செயலாளர்களாக விஜயலட்சுமி, அருள்பிரகாசம், மருத்துவர் ஸ்ரீதரன், சுபத்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தவெக தலைவர் விஜயின் இந்த அதிரடி உத்தரவு, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. புதிய பொறுப்பாளர்களின் நியமனம், கட்சியின் செயல்பாட்டை மேலும் விறுவிறுப்பாக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.