தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப். 2) பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தலைவர் விஜய் தனது காரில் வருகை தந்தபோது, அவரை வரவேற்கத் தயார் நிலையில் நின்றிருந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைக் கவனிக்காமல், விஜய்யின் கார் வேகமாக அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது. இதனால் சற்றும் எதிர்பாராத புஸ்ஸி ஆனந்த், காரைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற பதற்றத்தில், மூச்சிரைக்கக் காரின் பின்னாலேயே ஓடிச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களின் செல்போன்களில் பதிவாகியுள்ளது.

“>

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தலைவர் மீதுள்ள அதீத விசுவாசத்தால்தான் அவர் அப்படி ஓடினார்” எனத் தொண்டர்கள் ஒருபுறம் சிலாகித்துப் பேசினாலும், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவரை இவ்வாறு ஓடவிட்டது சரியா என அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், விழா மேடையில் இருவரும் மிகுந்த நெருக்கத்துடனும் புன்னகையுடனும் காணப்பட்டது தொண்டர்களிடையே நிலவிய சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.