கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முக்கியமான நடவடிக்கை எடுத்து உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர், உயிரிழந்த 41 குடும்பங்களை சேர்ந்தவர்களை கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான பயண வசதியாக தனிப்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதுடன், உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் முழுமையாக தவெக சார்பில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான நிவாரண அறிவிப்புகளை வழங்கும் திட்டத்தையும் விஜய் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன