தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஈரோட்டில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், த.வெ.க. மகளிர் அணியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
மேலும் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் அக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில், விஜய் அரசியலில் பெரும் வெற்றி பெற்று மக்கள் நலன் காக்க வேண்டும் எனப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது பேசிய கட்சியின் நிர்வாகிகள், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் நலனைப் பாதுகாக்க விஜய்யின் தலைமை அவசியமானது என்று வலியுறுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராக வேண்டி ஈரோட்டில் விளக்கு பூஜை நடைபெற்றது.#TVKVijay #Erode #VilakkuPooja #NewsUpdate #Oneindia #OITamil #OIReel pic.twitter.com/0QmUuo8Frx
— Oneindia Tamil (@thatsTamil) February 28, 2026
“>
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் முதல்வராக அரியணை ஏற வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் எனத் தொண்டர்கள் தெரிவித்தனர். ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
