எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “விஜய் எப்படி இன்று நம்பர் ஒன் நடிகரானார்? வெறும் திறமையால் மட்டும் இது சாத்தியமா? திறமையுள்ள நடிகர்கள் எத்தனையோ பேர் இங்கு இருக்கிறார்கள். சிலர் விஜய்க்குப் பேசுவதற்கு யாரோ எழுதிக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் எவருடைய உதவியும் இன்றித் தானாகப் பேசியே இந்த உயரத்தை அடைந்துள்ளார்” என்று விஜய்க்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் திறமையால் வளர்ச்சியடையவில்லை-ஆதவ் அரஜுனா
தவெகவில் மொரட்டு தற்குறி யார் என்றால் அது ஆதவ் அர்ஜுனா தான்.
லூசுப்பய @AadhavArjuna 😂 pic.twitter.com/DC9P39TgKl
— Shafeeq (@shafeeqkwt) December 26, 2025
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, விஜய்யின் பழைய பேட்டி ஒன்றும் அதனுடன் இணைக்கப்பட்டு வைரலாகி வருகிறது. அந்தப் பழைய காணொளியில் விஜய் பேசுகையில், “நான் சினிமாவில் பெரிய அளவில் கஷ்டப்படவில்லை; எனது தந்தையால்தான் மிக எளிதாக சினிமாவுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனா புகழந்து பேசியதும், அதற்கு முரணாக விஜய் தனது ஆரம்பகால வாய்ப்பு குறித்துப் பேசிய பழைய வீடியோவும் தற்போது எக்ஸ் வலைதளத்தில் விவாதத்தைக் கிளப்பி வைரலாகி வருகிறது.
