முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “டெல்லி செல்லும் பயணம் இப்போதைக்கு இல்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசியில் பேசி, ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். நிச்சயம் அவரை சந்திப்பேன். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த முடிவு நல்லதாக அமையும்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்ட போது, ஓபிஎஸ், “எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அது நல்லதாகவே அமையும்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.

இதனால், வரவிருக்கும் அரசியல் சூழலில் ஓபிஎஸ் மற்றும் விஜய் இடையேயான கூட்டணி சாத்தியம் குறித்த ஊகங்கள் அதிகரித்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.