தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெறும் அறிக்கையாக மட்டுமே உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தனது பாணியில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பட்ஜெட்டில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள் ஏதுமில்லை எனக் காட்டமாகச் சாடினார். அதேசமயம், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்துப் பேசிய அவர், தவெக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் பின்னணியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

​”ஒரு மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் விரைவில் கூட்டணியில் இணையும்” என நாஞ்சில் சம்பத் ஒரு புதிரான தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும், விஜய் தனது மாநாட்டில் ‘ஆட்சியில் பங்கு’ என வெளிப்படையாக அழைப்பு விடுத்தும், இன்றுவரை ஒரு கட்சி கூட தவெக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாஞ்சில் சம்பத் சொல்வது போல ஒரு தேசியக் கட்சி விஜய்யுடன் கை கோர்க்குமா அல்லது இது வெறும் அரசியல் யூகமா என்ற விவாதம் இப்போதே இணையத்தில் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.