தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் மார்ச் 15-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் நேர்காணலில் விஜய் பிஸியாக இருப்பதால், 15 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தார்.
மேலும், விசாரணையைச் சென்னையில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத சிபிஐ, மார்ச் 15-ம் தேதி டெல்லிக்கு நேரில் வர வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
“நாங்கள் சென்னையில் விசாரணை நடத்தக் கோரினோம், ஆனால் அவர்கள் டெல்லிக்கு வரச் சொல்லியுள்ளனர்” என தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
