தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“அன்புள்ள விஜய்க்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயரவும், வளரவும் வாழ்த்துகள்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இசைத்துறையின் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்யின் அரசியல் கொள்கைகளான ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சமத்துவத்தைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருப்பது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராகுல் காந்தி மற்றும் அஜித் போன்ற ஆளுமைகள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது “இசைப் புயலின்” இந்த வாழ்த்து தவெக தொண்டர்கள் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் புதிய அரசியல் பயணத்திற்கு ஒரு பலமான தார்மீக ஆதரவாக இது அமைந்துள்ளது.