தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்களும் திரையுலகினரும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, தவெக தலைவர் விஜய்யின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது பாணியில் குத்தாட்டம் போட்டு கொண்டாடியுள்ளார்.

விஜய்யின் தீவிர ஆதரவாளரான கொட்டாச்சி ஆடிய இந்த வெற்றிக் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரையில் சிறு வயது முதலே விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உற்சாகமாக நடனமாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் தவெகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வரும் வேளையில், கொட்டாச்சியின் இந்த கலகலப்பான கொண்டாட்டம் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.