தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தற்போதைய சூழலில் என்.டி.ஏ (NDA) கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தங்களது பக்கம் இழுக்கும் எண்ணம் தவெக-விற்கு துளியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேசமயம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற மற்ற கட்சிகள் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜனநாயக முறைப்படி அதிக இடங்களை வென்ற கட்சிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் தவெக உறுதியாக இருப்பதை நிர்மல்குமாரின் இந்தப் பேட்டி தெளிவுபடுத்தியுள்ளது.
