தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை (Re-censorship) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை படத்தைக் தணிக்கை குழுவிடம் காண்பிக்க படக்குழுவினர் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இறுதி வரை திரையிடல் (Screening) நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. தணிக்கை குழு உறுப்பினர்கள் வராதது அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் இது தள்ளிப்போயிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

​ஏற்கனவே தணிக்கை வாரியத்துடன் ஏற்பட்ட சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து, படக்குழு நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற்றுவிட்டு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் தணிக்கை தள்ளிப்போயிருப்பது படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் படத்தின் ரிலீஸ் தேதியைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.