விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி வருகிற 2026 தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என சோசியல் மீடியாவில் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் தமிழக வெற்றி கழகம் தலைமையில் பெரும்பான்மையுடன் தான் வெற்றி பெறுவோம் என விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்குமா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இபிஎஸ் எப்போதாவது கூறினாரா? சமூக வலைதளங்களில் ஆயிரம் பேசுவார்கள். அதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. அதிமுக மீண்டும் 2026-ல் ஆட்சி அமைக்கும் என்பது மட்டும் உறுதி என கூறியுள்ளார்.
