தவெக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளார். இந்த பிரச்சாரத்தை முன்னிட்டு கட்சி தலைமையகம் தொண்டர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. விஜய் செல்லும் வாகனத்திற்கு பின்னால் வேறு வாகனங்களில் பின்தொடர அனுமதி இல்லை எனவும், அதனை மீறக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் நேரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், காவல்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் முதல் பிரச்சார பயணம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கட்சி தலைமையகம் மேற்கொண்டுள்ளது.