உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக நடிகர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைபெற்று  இருக்கிறார். முன்னதாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான  நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் குணமடையுங்கள் அன்பே விஜயகாந்த் சார்… என் மனப்பூர்வமான பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.