தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கவலையடைய வைத்தது. இந்த நிலையில் விஜயகாந்த் நினைவாக அவருடைய மனைவி பிரேமலதா செய்த காரியம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது. அதாவது மறைந்த விஜயகாந்தின் முழு உருவத்தை கையில் அழகாக பிரேமலதா பச்சை குத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.