300க்கும் அதிகமானோர் உங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு  இந்த படைபலம் உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்குமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இப்ப மட்டும் இல்ல… ஒவ்வொரு ஊராக பயணம் செய்கிறோம் அல்லவா, அங்கேயும் கூட்டமேடையில் வந்து நாங்க உறுப்பினரா ? உணர்வோடு இணைகிறோம் என்று ஒரு சீட்டு கொடுக்கிறோம். அதுல பதிவு பண்ணி 300 400,  500 என மக்கள் சேர்ந்து கொண்டு தான் இருக்காங்க.  அது தொடர்ச்சியாக நடக்குது.

இப்ப உறுப்பினர் சேர்க்கை முகாம்ன்னு போட்டால் குறைந்தது 50 பேரு,  60 பேர்,  100 பேரு இணைவாங்க. அது தொடர்ச்சியாக நடக்கும்.  இது வந்து பூந்தமல்லி தொகுதியில் மட்டும் இணைச்சி சேர்த்திருக்கிறார்கள்.  நான் சென்னையில் இருந்ததுனால இங்க சந்தித்திறேன்,  நாளைக்கு திருச்சி போறேன் என்பதால் இப்போது.சந்திக்கின்றேன், அது தொடர்ச்சியாக நடக்குது என தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியினரிடம் NIA சோதனை நடத்துவது என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,

எல்லாருக்கும் தெரிஞ்ச காரணம்தான். நீங்க இப்படி தான் பார்க்கணும்… நாம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு,  தொடக்கத்தில் இருந்தே மக்கள் பாதையில்,  ஜனநாயக வழியில…   மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு அரசியல் பேரியக்கம். அவங்க கிட்டயே பதிவு பண்ணி,  அவங்க கிட்டயே சின்ன ஒதுக்க சொல்லி போராடுறோம். மக்களோடு நின்னு நம்ம தேர்தலை எதிர்கொள்கிறோம்.

இரண்டாவது கட்சி  கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள் எல்லாமே அரசு மற்றும்  காவல்துறை ஒப்புதலோடு தான் அனுமதி பெற்று நடக்கின்றது. சட்டத்திற்கு எதிராக அல்லது சட்ட ஒழுங்கு சீர்கேடுகிற நடவடிக்கைகளோ, செயல்பாடுகளோ இல்ல,  எல்லோருக்கும் தெரியும். இதுல உளவுத்துறை இருக்கு,  காவல்துறை இருக்கு, அதுக்கும் மேல ரா இருக்கிறது.  இதெல்லாம் வச்சி நீங்க கண்காணித்துட்டு,  திடீர்னு போயிட்டு வீடு வீட்டுக்கு நாங்க NIA  சோதிக்கிறோம் அப்படின்னா…. அது அது சும்மா தேர்தல் நேரத்துல  சும்மா அச்சுறுத்தி பார்க்கிறதுதான் என தெரிவித்தார்.