தேமுதிக தலைவர் விஜயகாந்த் காச்சலுடன் கூடிய தொடர் இருமல் மற்றும் சளி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலை மோசம் அடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் பலரும் குவிந்தனர்.

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வெகுவிரைவில் நல்ல உடல் நலத்துடன் அவர் வீடு திரும்புவார், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் நம்ப வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.