உலகிலேயே மிகவும் விஷமுள்ள மற்றும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றான ராஜநாகம் (King Cobra) எதிரில், பயமின்றி நின்று, அதன் கண்களை நேராக பார்த்த நபரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, உயிரை பணையம் வைக்கும் துணிச்சல் என்றே அனைவரும் கூறி வருகின்றனர்.
வீடியோவில், ராஜ நாகத்தின் முன்னால், ஒரு நபர் மிக அருகில் நின்று, அதைப் பயமின்றி நேரடியாகப் பார்க்கிறார். நாகம் தீவிரமாக தனது நாக்கை வெளியே நீட்டிய நிலையில் அவர் அதன் கண்களை பார்க்கிறார்.
View this post on Instagram
இதனைப் பார்க்கும் தருணம், “இப்பொழுதே தாக்கும்!” என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பதற்றமாக உள்ளது. அதே நேரத்தில், அந்த நபர் தன்னுடைய முகத்தை கேமராவை நோக்கி திருப்ப, நாகம் சீறி எழும்புகிறது. அந்த சில வினாடிகள் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையிலான விளையாட்டு போன்று காணப்பட்டது.
மேலும் இந்த வீடியோவை Instagram தளத்தில் @therealtarzann என்ற கணக்கு வைத்த நபர் பதிவிட்டுள்ளார். தற்போது இது 90 லட்சம் (9 மில்லியன்) முறை பார்க்கப்பட்டிருப்பதோடு, 4 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இதுதான் உண்மையான தைரியம்!”, “இது சாதாரணம் இல்லை; இது உயிரோடு விளையாடுவது” என்று சிலர் புகழ்ந்துள்ளனர். மற்றொருபுறம், “இதுபோன்ற செயல்கள் மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கக்கூடும்” என சிலர் கவலையும் தெரிவித்துள்ளனர்.
