நீரின் கீழ் இருந்து வேட்டையாடும் ஆபத்தான விலங்குகளுள் முதலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நிலத்திலும் நீரிலும் சமமாக இயங்கக்கூடிய இந்த விலங்குகள், பெரும்பாலும் “நீர் அரக்கர்கள்” என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, இந்தக் கூற்றிற்கு உறுதியான சான்றாக பார்க்கப்படுகிறது. வீடியோவில், நீருக்கடியில் ஒரு குழாய் போன்ற தெளிவான கண்ணாடி அமைப்புக்குள் சிலர் அமர்ந்திருக்க, அவற்றை பார்த்து ஒரு பெரிய முதலை தொடர்ந்து தாக்க முயற்சிப்பது காணப்படுகிறது.
There is not enough money in the world to make me do this 😳
pic.twitter.com/faXkBSMqEr— Scary Underwater (@scaryunderwater) September 3, 2025
இந்த காட்சியில், முதலில் ஒரு பெண் அந்தக் குழாயில் அமர்ந்திருப்பதை முதலைக் கவனிக்கிறது. உடனே, அவள் மீது பாய முயற்சிக்கிறது. ஆனால் குழாயின் வெளிப்புறம் திகழும் தடுப்புக் கண்ணாடி, முதலையின் முயற்சியைத் தோல்வியடையச் செய்கிறது.
அதன்பின்னர், தொடர்ந்து முதலை முன்னேறியபோதும், மீண்டும் கண்ணாடிச் சுவர் தடுக்கிறது. இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இது தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது @scaryunderwater எனும் கணக்கில் இந்தக் காணொளி பகிரப்பட்டுள்ளது. மேலும் சுமார் ஒரு நிமிட நேரம் கொண்ட இந்த வீடியோ, இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் இதனை லைக் செய்து, தங்கள் திகைப்பான விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
