ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருவரெட்டியூர் பகுதியில் மூர்த்தி-ஜெயம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூபாலன் என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் முடித்துள்ள நிலையில் ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பர்களான பாபு மற்றும் கவின் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதிலிருந்தே பூபாலன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். நண்பர்களின் பிரிவை தாங்க முடியாமல் பூபாலன் மனவேதனையில் இருந்த நிலையில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தன் பெற்றோரிடம் கூறினார். இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் பூபாலனை சிகிச்சைக்காக அவர்கள் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டனர். அதோடு அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நண்பர்களின் பிரிவை தாங்க முடியாமல் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று பூபாலன் முடிவு செய்தார். அதன்படி நேற்று பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பூபாலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற அவருடைய தாய் வீட்டிற்கு திரும்பி வந்தபோது தன் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.