தமிழக அரசியல் களத்தில் புதிய ஆளுங்கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரியணை ஏறியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. பிரவீன் சக்ரவர்த்தி எதிர்க்கட்சியான திமுக-வை மிகக் கடுமையாகச் சாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டிவிகே-வின் இந்த இமாலய வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான ஒரு போலி பிம்பம் என்று கூறி திமுகவினர் இன்னும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன் என்று அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுகவினர் தரைமட்ட யதார்த்தத்தையும், மக்களின் உண்மையான மனநிலையையும் புரிந்து கொள்ளாமல் இன்னும் “முட்டாள்களின் சொர்க்கத்தில்” தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் விளாசியுள்ளார். டிவிகே-வுடன் கரம் கோர்த்துள்ள காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்துள்ள இந்த விமர்சனம், ஆட்சியைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் திமுக-வுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் TVK-வின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராமால் உருவான வெற்றி என்று கூறி திமுக நிராகரிக்க விரும்பினால், அதற்காக நான் அவர்களை வாழ்த்துகிறேன், அவர்கள் அந்த முட்டாள்களின் சொர்க்கத்திலேயே இருக்கட்டும். அவர்களுக்கு மக்களின் மனநிலை புரியவில்லை.
-திரு. ப்ரவீன் சக்ரவர்த்தி… pic.twitter.com/gkhKdZnBgG— WhistleBlower (@Whistle4TN) May 21, 2026
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் உண்மையான செல்வாக்கைக் கண்டு பயந்துதான் திமுகவினர் அதை சமூக வலைதள வெற்றி என்று மழுப்புகிறார்கள் என்பதை பிரவீன் சக்ரவர்த்தி ஓப்பனாக உடைத்துள்ளார். டிவிகே-வின் இந்த அதிரடி வெற்றியையும், மக்களின் பேராதரவையும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திமுகவினர் புலம்புவது அவர்களின் அரசியல் அறியாமையையே காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
