தமிழக அரசியலில் தற்போது “செயல் – எதிர்வினை – விளைவு” என்ற தலைப்பில் வலம் வரும் மீம்ஸ் விடீயோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோருக்கு இடையிலான அரசியல் வார்த்தைப் போர்களை மையமாக வைத்து, உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் வீடியோவில், மக்களின் வரிப்பணம் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் குறித்து அனல் பறக்கும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து “கொடுத்த வரிப்பணம் தானே, இது உங்க அப்பா வீட்டுப் பணமா?” என்ற கேள்வி, பொதுமக்களின் கோபத்தையும், அரசியல்வாதிகளின் பதிலடிகளையும் ஒரே புள்ளியில் நிறுத்தி, இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
See this Instagram video by @ilayabharathamib https://t.co/U3MYU904gp
“>
அதோடு “வாழ்க்கை ஒரு வட்டம்” என்ற தத்துவத்தோடு, “அன்று யார் அப்பன் வீட்டு சொத்து என்று கேட்டார்களோ, இன்று அவர்களையே காணோம்” என்ற வாசகம், தற்போதைய அரசியல் சூழலில் ஒருவித நையாண்டி கலந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால் அதிகார மையங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இந்த ‘சொத்து’ மற்றும் ‘வரிப்பணம்’ குறித்த விவாதம், வெறும் அரசியலாக மட்டும் பார்க்கப்படாமல், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா சீதாராமனின் எதிர்வினையும், விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், இந்த மீம்ஸ் மக்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
