
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை புறத்திற்கு சென்று அங்குள்ள பூவரச மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் சண்டை போட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.