டைரக்டர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமா கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் மற்றொருபுறம் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”.

இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படமும் வருகிற ஜன,.11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இவ்வாறு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய 2 படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி ஒரேநாளில் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. கடந்த 2014ம் வருடம் அஜித்தின் “வீரம்”, விஜய்யின் “ஜில்லா” ஆகிய 2 படங்களும் ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகியது. தற்போது 9 வருடங்களுக்கு பின் இரண்டு பேரின் படங்களான துணிவு, வாரிசு இரண்டும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது. ஆகவே இப்போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.