வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் வாரிசு படத்தில் ஒரு காட்சியில் மெட்டி ஒளி தொடரின் ரெபரென்ஸ் போட்டு அவர்களை அவர்களே கலாய்த்து இருக்கின்றனர் என ரசிகர்கள் சிலர் பேசி வருகிறார்கள். தற்போது இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி தன்னைத் தானே ட்ரோல் செய்து அதனை ரசிகர்கள் ரசிக்குமாறு செய்த இயக்குனர் வம்சியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.