அஹமதாபாத் மைதானத்தில் மே 22-ம் தேதி நடந்த ஐபிஎல் 2025 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் 16-வது ஓவரில் நடந்த ஒரு சுவாரசியமான தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய போது, வலதுபக்கம் களத்தில் நின்று கொண்டிருந்த நிக்கோலஸ் பூரனுடன் ஏதோ சில வார்த்தைகளை பேசினார்.

சிராஜ், 16வது ஓவரின் நான்காவது பந்தை வீசிய பிறகு, மீண்டும் பூரனிடம் சில வார்த்தைகளைச் சொன்னார். இதற்கான பதிலை, பூரன் வாயால் அல்லாது தன் பேட்டால் கொடுத்தார். அடுத்த பந்தில் அவர் சிக்ஸரையும், அதற்கு அடுத்த பந்தில் ஸ்ட்ரெய்ட் டிரைவ் பாணியில் அழகான பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவர் நிறைவில், பூரன் தனது பேட்டை சிராஜை நோக்கி முத்தமிட்டதோடு, ஒரு வலுவான பதிலடி கொடுத்தார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. “வார்த்தைகளுக்கு பதிலடி பேட்டில்!” என ரசிகர்கள் புகழ்ந்தனர். போட்டியின் சூட்டில் நேர்ந்த இந்த நிமிடம், நிக்கோலஸ் பூரன் தன்னம்பிக்கையை காட்டிய முக்கிய தருணமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், சிராஜின் வேகமான பந்துகளை, சீரான முறையில் எதிர்கொண்டு ஆடிய பூரனின் கம்பேக்  லக்னோ அணிக்கு ஊக்கமளித்தது.