உத்தரகண்ட் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தீவிர கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள், மக்கள் மட்டுமன்றி வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளன.
இந்நிலையில், வனப்பகுதியில் வசித்து வந்த ஒரு சிறுத்தை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததைப் பதிவு செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இக் காணொளி, @paragenetics என்ற X கணக்கில் பகிரப்பட்டது. வீடியோவில், வெள்ளத்தில் அசைவின்றி பாயும் நீருடன் மூழ்கிய சிறுத்தை காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களிடம் இது மிகவும் வேதனைக்கேட்பதாக பறைசாற்றப்படுகிறது.
இக்காணொளிக்கு இணைக்கப்பட்டுள்ள பதிவில்,
“மனதை உடைக்கும் இழப்பு. இமயமலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இயற்கையின் சக்தி மகத்தானது – வனவிலங்கு பாதுகாப்பில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்” என பதிவுசெய்யப்பட்டுள்ளது.
A heartbreaking loss. A Leopard drowned due to flash floods triggered by heavy rains in the Uttarakhand, Himalayas. Nature’s power is immense — let’s stay mindful of wildlife safety. #Uttarakhand #Wildlife #Leopard #Conservation #nature pic.twitter.com/jU7jAldbkg
— Dr. PM Dhakate (@paragenetics) September 1, 2025
