இரவு நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வான்பகுதியில் சந்திராயன் 3 விண்கலம் தெரிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானியல் ஆர்வலரான டிலான்  இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து ரீட்வீட் செய்து வருகின்றனர்.

அந்த பதிவில் டிலான் youtube இல் சந்திராயன் 3 நேரலை வெளியீட்டை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதிலிருந்து 30 நிமிடங்களில் இரவு நேரத்தில் தனது வீட்டைக் கடந்து சந்திராயன் 3 சென்றபோது இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.