உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வீடியோ செய்திகளை அனுப்பும் திறனில் மெட்டாவுக்கு சொந்தமான இயங்கு தளம் செயல்படுகிறது.

இதன் மூலம் இயங்கி வரும் உடனடி செய்தியிடல் தளம் அதன் பயனர்களை வீடியோ செய்திகளை முன்னோட்டம் இடவும் அனுப்பவும் விரைவில் அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்கிரீன்ஷாட்டில் நீங்கள் பார்ப்பது போல, நீங்கள் வீடியோ செய்தியை பெற்றால் சார்ட்டில் வீடியோ செய்தி முன்னோட்டம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் படங்கள், வீடியோக்கள், GIF கள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றுக்கும் கிடைக்கிறது. வாட்ஸ் அப்பில் வீடியோ செய்திகள் எண்ட் டு எண்ட் என்க்கிரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது