இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். குறிப்பாக சமீப நாட்களாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏராளமான பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிடுவதால் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மீது அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிலர் கவன சிதறல்கள் காரணமாகவும் வேறு சில காரணங்களுக்காகவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் உங்கள் கணக்கை எப்படி டெலிட் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஒருவர் இன்ஸ்டாகிராம் கணக்கை அவருடைய செல்போனில் உள்ள  இன்ஸ்டாகிராம் ஆப்பில் டெலிட் செய்ய முடியாது. லேப்டாப் அல்லது மொபைல் ப்ரவுசர் மூலமாகத்தான் இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்ய முடியும். இல்லையெனில் ஐபோனில் இருக்கும் இன்ஸ்டாகிராம் ஆப் மூலம் டெலிட் செய்யலாம். தற்போது லேப்டாப்/கம்ப்யூட்டரில் எப்படி இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

முதலில் கம்ப்யூட்டரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும். அதில் வலது பக்கத்தில் மேலே உங்களுடைய புகைப்படம் இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுடைய ப்ரொபைல் வரும். அதன் பிறகு temporary deactivate my account என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் எதற்காக நீங்கள் கணக்கை டெலிட் செய்கிறீர்கள் என்ற காரணத்தை கேட்கும். அந்த காரணத்தை கொடுத்த பிறகு பாஸ்வேர்டை உள்ளிட்டால் உங்களுடைய கணக்கு தற்காலிகமாக டெலிட் செய்யப்படும்.

ஒருவேளை கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் ஆப்ஷன் இருக்கிறது. நீங்கள் கணக்கை திரும்ப பெறுவதற்கும் ஒரு மாத காலம் கால அவகாசம் கொடுக்கப்படும். இதற்குள் நீங்கள் கணக்கை மீண்டும் திரும்ப பெற விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பாஸ்வேர்டை மறந்து விட்டால் ஃபர்கெட் பாஸ்வேர்டு கொடுத்த பிறகு உங்களுடைய பாஸ்வேர்டை மீண்டும் திரும்ப பெற்றால் மட்டும் தான் கணக்கை டெலிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.