உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி மெட்டா நிறுவனம் வாட்சப்பில் பாதுகாப்பு கருவிகள் அடங்கிய புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு கருவிகளை whatsapp டெவலப்பர்கள் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய whatsapp பாதுகாப்பு கருவிகள் தெரியாத மற்றும் புதிய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தும்.

இவ்வாறான அழைப்புகளின் போது இந்த பாதுகாப்பு கருவிகள் பாப் அப் ஆகி அதனை என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும். ப்ரொபைல் புகைப்படம் , போன் நம்பர், ரிப்போர்ட் செய்வது மற்றும் பிளாக் செய்வது ஆகியவற்றை சரிபார்த்து அதனை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும். மேலும் தெரியாத நபர்களில் இருந்து வரும் மெசேஜ்களை சம்பந்தப்பட்ட நபர் படித்தாரா என்பதை அனுப்பியவர் தெரிந்து கொள்வதை இந்த பாதுகாப்பு கருவிகள் தடுக்கின்றது.