இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பயனர்களின் வசதிக்காக whatsapp தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. முதலில் சாட்டிங் மட்டுமே இருந்த நிலையில் தற்போது குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு என புதிய அப்டேட்டுகள் வந்துள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவருமே உங்கள் தொடர்புகளால் போஸ்ட் செய்யப்படும் புதிய ஸ்டேட்டஸ் ஐ பார்ப்பீர்கள். பெரும்பாலும் நாம் அந்த ஸ்டேட்டஸ்களில் சிலவற்றை விரும்புவோம். அதனை அப்படியே நம்முடைய போனில் சேமிக்க முடியாது.

ஒருவரின் வீடியோ ஸ்டேட்டஸ் நீங்கள் சேமிக்க விரும்பினால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் பைல்ஸ் என்பதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு பயன்பாட்டின் மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு செட்டிங்ஸ் விருப்பத்தை தேர்வு செய்து show hidden files என்பதை ஆன் செய்ய வேண்டும். பின்னர் தொலைபேசியில் பைல் மேனேஜர் என்பதை திறந்து internal storage என்ற விருப்பத்திற்கு சென்று வாட்ஸப்பில் தட்டவும். பிறகு மீடியாக்குச் சென்று அங்கிருந்து ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது வாட்ஸ் அப்பில் நீங்கள் பார்த்து அனைத்து ஸ்டேட்டஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இங்கு பார்க்க இயலும். இதில் நீங்கள் விரும்பியதை எளிதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.