ரூ.16,499 விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அட்டகாசமான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளது. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜேக் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இது 4ஜி LTE சிம் கார்டு மூலம் வைபை கனெக்சனை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் தளங்களில் இந்த லேப்டாப்பை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.